செய்தி

எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீடப்படவுள்ளது..

Wednesday, 10 January 2018

பனை பாடும் பாடல் நூல் வெளியீடு

பனை

பனை பாடும் பாடல்


எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் 

நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீடப்படவுள்ளது

Sunday, 11 June 2017

Taimes of india -பனை செய்தி11-06-2017 தேதி  Taimes of india வில்-பனை பற்றிய செய்திபஞ்சவர்ணம்

Monday, 1 May 2017

எனது பார்வையில் இரா. பஞ்சவர்ணத்தின் பனைமரம் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா

பஞ்சவர்ணம்
பனைமரம்

சிவலிங்கராஜாபேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் (ஓய்வு)
யாழ்ப்பாணம்

எனது பார்வையில்
இரா. பஞ்சவர்ணத்தின் பனைமரம்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனைமரம் என்னும் பாரிய நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இவர் பற்றிய தகவல்களை நண்பர் விருபா குமரேசன் தந்தார்கள்.
பஞ்சவர்ணம் உழைப்பையும் ஊக்கத்தையும் இந்நூலைப் பார்க்கும் சிறுவர்கள்கூட உணர்ந்துகொள்வர்.
ஆசிரியர் பஞ்சவர்ணம், நூல் பச்சை வண்ணம். முன்னால் ஒரு தனிப்பனை. பின்னால் ஒருபனங்கூடல் (எமது நாட்டிலே பனைகள் கூட்டமாக நிற்பதைப் பனங்கூடல்என்றே அழைப்பார்கள்.) அட்டைப்படம் அழகாக இருக்கிறது.
பல்வேறு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இந்த நூலைப் படித்தேன். எங்கள் ஊரிலே பனங்காய்ப்பாரதம் என்று ஒரு நூல் இருந்தது. ஆனால் இது பனைமரப்பாரதம் என்று எண்ணிக்கொண்டேன். பாரதம் ஒருநாளில் படித்து முடிக்கக் கூடியதல்லவே.
பனை பற்றி இனித் தேடமுடியாது என்ற அளவுக்குப் பஞ்சவர்ணம் பனை பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கின்றார். தமிழ்மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன தாவரம் பனை. சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியங்கள் வரை பனை முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளது - பெற்று வருகின்றது.
இலக்கியங்களில் மாத்திரமன்றிப் பண்டைய தமிழ் இலக்கண நூல்களிலும் பனை இடம்பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் பஞ்சவர்ணம் இந்நூலிலே தந்துள்ளார்.
நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதைகளிலும் பனை முக்கிய இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழநாட்டிலே பனையைத் தலைப்பாகக் கொண்டும், பனைசார் தொழிலாளர்களை மையமாகக் கொண்டும் புனைகதைகள் பல தோன்றியுள்ளன. உ+ம் : செங்கையாழியானின் முற்றத்து ஒற்றைப்பனை.
செந்நெறி இலக்கியங்களில் மாத்திரமன்றி நாட்டார் இலக்கியங்களிலும் பனை முதன்மை பெற்று வந்துள்ளது. குறிப்பாகப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் முதலியவற்றிலேயும் பனை பிரதான இடத்தைப் பெற்று வந்துள்ளது.
பனைமரம் என்ற இந்த நூல் இலக்கியம், வரலாறு, சமூகம், அரசியல், மருத்துவம், நாட்டார் வழக்காறு, உணவு, உறையுள் முதலான பல்வேறு விடயங்களையும் உள்வாங்கியுள்ளமை பாராட்டிற்குரியது. ஆசிரியரின் குன்றா உழைப்புக்கும் குறையா ஊக்கத்திற்கும் இவை சான்றாகும். இவை ஒவ்வொன்றையும் விரித்து எழுதுவதானால், இன்னொரு பனங்காய்ப்பாரதம் தோன்றிவிடும். விரிவஞ்சி விடுத்தோம்.
பனைமரம் என்ற இந்த நூலைப் பார்த்ததும் இரண்டு விடயங்கள் எமது எண்ணத்தில் ஆழமாக வேரோடின. ஒன்று, எமது கல்விப் பாரம்பரியமும் பனையும். இரண்டு, ஈழத்துக் குறிப்பாக வடபுலத்து மக்களின் வாழ்வியலிலே பனை பெற்ற முக்கியத்துவம்.
எமது கல்விப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்துப் பேணியும் பதிவு செய்தும் வைத்த பெருமை பனைமரத்திற்கே உரியது. இனிவரும் இடங்களிலே பனைமரத்தைப் பனை என்றே குறிப்பிடுவோம். பனை என்பதே போதுமானது. பனை ஓலையிலே (ஓரளவுக்கு முற்றிய சார்வு) தான் ஏடுசெய்யப்பட்டது. ஏடு செய்வதையே பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்ந்த குடும்பங்களும் இங்கே இருந்தன. அனைத்து இலக்கிய இலக்கணங்களையும் ஏட்டிலேயே எழுதினர். பனை ஓலையிலே எழுதப்பட்டதால் ஆவணங்களுக்கே ஓலைஎன்று பெயர். உதாரணமாகப் பெரியபுராணத்தில் வரும் மூல ஓலை, படி ஓலைஎன்ற தொடரையும், திருவெங்கைக் கலம்பகத்திலே வரும் ஓலை காற்றில் உருட்டடாஎன்ற தொடரையும் சுட்டிக்காட்டலாம். தென் இலங்கையிலே தளப்பத்துஎன்கின்ற (பனை போன்ற ஒரு தாவரம்) தாவரத்தின் ஓலையையே ஏடுஆகப் பாவித்தனர் என்று கூறுகின்றனர்.
பனை இல்லையேல் பழந்தமிழ் இலக்கியங்களை இன்று நாம் பெற்றிருக்க முடியாது. ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகின்றது……” எனத் தொடங்கும் சி.வை.தா.வின் உருக்கமான தொடரும், ‘ஏடு காத்த கிழவர்என உ.வே.சா.வைக் குறிப்பிடும் பொழுதும் எம் மனக்கண் முன் பனையே விஸ்வரூபமாக நிமிர்ந்து நிற்கிறது.
வாழ்வியலோடு ஒன்றிய கருப் பொருளாகிய பனைக்குத் தமிழ் இலக்கியங்கள் முக்கிய இடத்தைக் கொடுத்திருக்கின்றன. நேரடியாக, மறைமுகமான, உவமையாகப் பனையும் பனம் பண்டங்களும் இலக்கியங்களிலே பதிவாகியுள்ளன. காவியங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் முதலானவை பனை பற்றி நிறையவே பேசுகின்றன. பஞ்சவர்ணம் இவை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்.
பனையின் பயன்பாட்டினைப் பல தளங்களிலே நோக்கியுள்ள ஆசிரியர், பல தகவல்களையும் புள்ளி விபர அடிப்படையிலே விஞ்ஞான ரீதியாக விளக்கியுள்ளார். பனங்கள்ளினையும் நவீன பானங்களையும் ஒப்பீட்டு அடிப்படையிலே காட்டியுள்ளமையைச் சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.
பனையில் இருந்து பெறும் பொருள்களைக் கொண்டு பனம் பண்டங்களைத் (பனையிலிருந்து பெறும் உணவுப் பொருட்களைப் பனம் பண்டம் என்று வழங்கும் வழக்காறு யாழ்ப்பாணத்திலே உண்டு) தயாரிக்கும் முறைகளை மனையியல்பாட விளக்கம் போல ஆசிரியர் தருகின்றார்.
அழகான படங்கள் (நறுக்கு ஓவியம் உட்பட) இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பனை பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், உதாரணப் பாடல்கள் எனப் பல விடயங்கள் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.
ஈழநாட்டிலே பனையின் பயன்பாடு பற்றிய இலக்கியங்களையும் செய்திகளையும் (பனை அபிவிருத்திச் சபை உட்பட) தந்துள்ள பஞ்சவர்ணம் தமக்குக் கிடைத்த தகவல்களையே பதிவுசெய்துள்ளார். இன்னும் இடம்பெற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன.
பனை பற்றியும் பனையின் பயன்பாடு பற்றியும் ஈழத்து அறிஞர்கள் பலர் பதிவு செய்துள்ளனர். இவர்களிலே பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வியந்து குறிப்பிடப்பட வேண்டியவர். இவர் எழுதிய காதலியாற்றுப் படையிலே பனை மிக முக்கிய இடம் பெறுகின்றது. காதலியாற்றுப்படைத் தலைவகைக் கரு நெடும்பனங்காடு கிழவோனேஎன்று கூறியே ஆற்றுப்படையை நிறைவுசெய்கின்றார்.
இலங்கையில் நடந்த யுத்தகாலங்களிலே பனையின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவை விரிவாகப் பேசவேண்டியவை.
இந்நூல் ஒரு புதிய பெரிய முயற்சி. நீண்டநாள் உழைப்பின் அறுவடை. எமது பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பனையின் விஸ்வரூபத்தைக் காட்டும் அரியதோர் ஆவணம். அறிஞர் இரா.பஞ்சவர்ணத்திற்கு எம் பாராட்டுக்கள்.

Tuesday, 4 April 2017

பெருந்தலைவர் காமராஜருடன் பஞ்சவர்ணம்

1972-ஆம் வருடம் காங்ரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு பெற்று வாழ்த்து பெற சென்ற போது பெருந்தலைவர் காமராஜருடன்  - பண்ருட்டி பஞ்சவர்ணம்


Sunday, 5 March 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை'பனைமரம்' நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனைமரம்Thursday, 16 February 2017

பனைமரம் நூல் மதிப்புரை

டாக்டர் இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பனைமரம் நூல் மதிப்புரை ஹிக்கிம்பாதம்(HIGGINBOTHAMS) நடத்தும் செய்தி மடலான தி மெயிலில்(The mail)


பனைமரம்

பஞ்சவர்ணம்

Thursday, 12 January 2017

அருட்பாத் தாவரங்கள் நூல் மதிப்புரை அரிமா நோக்கு.

இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் மதிப்புரை அரிமா நோக்கு.
பலாமரம் நூல் மதிப்புரை

இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பலாமரம் நூல் மதிப்புரை ஹிக்கிம்பாதம்(HIGGINBOTHAMS) நடத்தும் செய்தி மடலான தி மெயிலில்(The mail)


பலாமரம்


Friday, 23 December 2016

பனைமரம் நூல் வெளியீட்டு விழா

பனைமரம்
பனைமரம் - panai maram
மொழி - தமிழ்
ISBN NUMBER - 9788192377193
மொத்த பக்கம் - 756
விலை - ரூ. 800
வெளியீட்டு தேதி - 21-12-16
எடை - 900 கிராம்
நூல் அளவு  அகலம் 14 செமீ; நீளம் 22 செமீ; மையம்: 3.5 செமீ

பனைமரம்

நூல் வெளியீடு
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,
 பேராசிரியர் டாக்டர் அ. பாலு,
சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர்,
முனைவர் பால. இரமணி இ.ஒ.ப,
கவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,
நூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்
சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.

ஒப்பிலா மதிவாணன்
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை

பொற்கோ
பேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை


கி. தனவேல் இ.ஆ.ப
கவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை

குமரி அனந்தன்
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை

பால. இரமணி 
சென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை


ஸ்ரீ. பாஸ்கரன்
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை

அ. பாலு
மெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை

பஞ்சவர்ணம்
நூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை

Saturday, 17 December 2016

டாக்டர் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் 'பனைமரம்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


டாக்டர் இரா.பஞ்சவர்ணம் அவர்களின்  'பனைமரம்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் 
21-12-2016 புதன்கிழமை அன்று 2.30 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறை மூலம் வெளியிடப்படவுள்ளது.
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம்
       காமராசர் சாலை (திருவள்ளுவர் சிலை எதிரில்) இரா. பஞ்சவர்ணம்

பனை

BOOK NAME - panai maram - பனைமரம்
LANGUAGE - Tamil
ISBN NUMBER - 978-81-923771-9-3
NO OF PAGE - page - 754
PRISRE - RS. 800
PUBLISHED DATE - 21-12-2016
WIGHT - 900

Book size - அகலம் 14; நீளம் 22; center: 3.5

இந்நூல் - ஓர் அறிமுகம்
நூல்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் அரசமரம்ஜ’, ‘சிறுதானியத் தாவரங்கள்ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில்  ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் பனைமரம்என்ற இந்நூல் இப்போது வெளியிடப்படுகிறது.

களஞ்சியம்
பனைமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும்  உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
இந்நூலின்கண் பனைமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு, ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள், இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள், மருத்துவப் பயன்பாடுகள், போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.
பனைமரப் பாகங்களின் பயன்பாடுகள்
பனை ஓலை, மடல், மட்டை, நார் (சோற்றுப்பகுதி நீக்கியது), பாளை, பூந்துணர்ச்சாறு, கள், காடி, பதநீர், பனங்காய், நுங்கு, இதக்கை (முதிர்ந்த நுங்கு), பனம்பழம், பனங்கொட்டை, பனங்கிழங்கு, பன்னாடை, பனையின் தண்டுப்பகுதி (வைரம்), மரத்தின் பயன்பாடு, மரச்சோறு, பனையின் வேர்ப்பகுதி, பனைநீர், கொட்டுப்பனை (காய்ந்த பனை மரம்), பனை புல்லுருவி. பனையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றம் வேதிப்பொருட்கள், பனங்கள் எடுக்கப் பயன்படுத்திய சிறப்புக் கருவிகள் - போன்ற விவரங்கள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு, காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.
ஈழச்செய்திகள்
ஈழச் செய்திகளான புராணம், பழமொழிகள், நாடகப்பாடல்கள், தாலவிலாசம் தமிழ் ஆங்கில பாடல்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆன்மீகம்
பனைமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், கடவுள் பெயரோடு பனைமரம் இணைந்துள்ள மூர்த்திகள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், பனை மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பனையின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற பிற தாவரங்கள், முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவம்
பனையின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அனுபானம், பனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனாநி, மருந்துவ உணவு - போன்ற மருத்துவ முறைகளில் பனைமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
மனிதர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, பறவை - விலங்கின மருத்துவத்திலும் பனையின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
அகத்தியர் வைத்தியச் சதகம், தேரையர் மகா கரிசல், தேரையர் வைத்தியம் 1000, பிரம்மமுனி வைத்திய விளக்கம், குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம், பிரம்மமுனி மருத்துவ விளக்கம், அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், அகத்தியர் வைத்தியச் சிந்தாமணி, அகத்தியர் ஆயுர்வேதம் 1200, அகத்தியர் ஆயுர்வேதம் 1500, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம், சித்தமருத்துவத் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம், பதார்த்த குணம், வள்ளலார், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பனை பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
நேரடி உணவாகும் பனையின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பனையிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருள்களும் சுட்டப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல், விலங்கினம், கால்நடை, பறவையினம், பூச்சி புழுவினத்திற்கெல்லாம் பனைபடுபொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமாவும் தயாரிக்கப்பட்டுஅட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளன. தேவையான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் பாகங்கள் அனைத்தும் வழுவழு தாள்களில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், எளிதாகப் பாகங்களை அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பெற்று இணைக்கப்பட்டுள்ளன; சங்க இலக்கிய ஒப்பீடுகளும் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில்
தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக்க குறிப்புகள், மருத்துவப்பயன்கள், உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பனைமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.


Saturday, 3 December 2016

Sri Sarda Ashram பஞ்சவர்ணம் அவர்களின் பாராட்டு விழா வாழ்த்து

பஞ்சவர்ணம் அவர்களின் பாராட்டு விழா வாழ்த்து

Sri Sarda Ashram
Vivekananda nagar, New Edaikkal
Ulundurpet – 606 107
Villupuram District, Tamil Nadu
Cell: 89030 06955, 94431 21452
94874 94860 37372

பேரன்பிற்குரிய ஸ்ரீமான் பஞ்சவர்ணம் அவர்களுக்கு,
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருவருளை முன்னிட்டு எழுதுவது. தாங்களும், தங்களுடைய குடும்பத்தினரும் நலமுடன் வாழ பிராத்தனை செய்து கொள்கிறோம்.
உலக தமிழ் பல்கலைக்கழகத்தில் (USA) தங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்ததற்கான பாராட்டு விழா அழைப்பிதழ் கண்டி நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
தங்கள் பண்ருட்டி நகரமன்றத் தலைவராக இருந்த காலம் முதலே தங்களின் உழைப்பையும், சிந்தனையையும், நேர்மையையும், மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள ஆழமான அன்பையும் கண்டு நாங்கள் பலமுறை வியந்து இருக்கிறோம்.  கணினி அறிமுகமான அதன் ஆரம்ப காலங்களிலேயே அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உடனுக்குடன், காலதாமதமின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்ற தாங்கள் எடுத்துக் கொண்ட உழைப்பையும் அதன்பின் நிறைந்து இருந்த நல்லுணர்வுகளையும் நமது ஆஸ்ரம சகோதரிகள் நேரில் வந்து பார்த்து அதைப் பற்றி அடிக்கடி பெருமையாக பேசிக்கொண்டு இருந்தது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.
ஒரு மனிதர் ஒரு துறையில் சிறந்து விளங்கவே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  தாங்களோ பண்ருட்டி போன்ற ஒரு பெரிய வியாபார நகரில் தலைவராக, அந்தப் பொறுப்பை சிறந்த முறையில் நிறைவேற்றியத்தோடு மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அளவில்லாத அன்பு கொண்டு தங்கள் அலுவலகத்திலேயே ஒரு அற்புதமான மூலிகைப் பண்ணையும், தோட்டமும் அமைத்ததையும், தன்வந்திரி ஆலயத்தில் மற்றும் திருவதிகை திருத்தலத்தில் மூலிகைகள் வளர்த்ததையும், பண்ருட்டி நகரை மரங்கள் நிறைந்த நகரமாக மாற்றியதும் இவை மட்டுமல்லாது தங்கள் இல்லத்திலேயே விதவிதமான அரிய வகை தாவரங்களை பாதுகாத்து வளர்த்ததையும் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்த்து செயலூக்கம் பெற வேண்டிய அற்புதமான நிகழ்வுகள்!
இந்தக் கலியுகத்தில் தர்மம் தாழ்ந்து அதர்மம் தழைத்து நேர்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காதோ என்று நல்லவர்கள் ஏங்கும் போது, இறைவா! நேர்மை ஜெயிக்க வேண்டும்! நல்லவர்கள் வெற்றியாளர்களாக வர வேண்டும்! அவர்களின் கடினமான உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு அகில உலகத்துக்கும் தெரிய வேண்டும்!” என்று பல நாட்கள் ஆஸ்ரம துறவிச் சகோதரிகள் மனம் உருகி பிரார்த்தனை செய்து இருக்கிறோம்.  தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அற்புதமான பட்டத்தின் மூலம் இறைவன் எங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளதாக பூரணமாக நினைக்கிறோம்.
தாவரங்கள் பற்றி தாங்கள் எழுதியுள்ள புத்தங்களை ஒன்று விடாமல் நாங்கள் படித்து இருக்கிறோம். அதன் ஒவ்வொரு பக்கமும் தங்களின் உழைப்பை பேசுவதை உணர்ந்து இருக்கிறோம்.  எத்தனையோ நபர்களை சந்தித்து, எத்தனையோ இடங்களுக்கு அலைந்து, எத்தனையோ புத்தகங்களைப் படித்து, எத்தனையோ விஷயங்களை ஆராய்ந்து, இரவுப்பகல் பாராமல் தாங்கள் கடுமையாக உழைத்ததன் மூலமே அந்தப் புத்தகங்கள் வெளிவந்திருக்கும்.  கிராமம், கிராமமாக பாரம்பரிய நெல் இரகங்களைத் தேடி தமிழகம் முழுவதும் அலைந்த எங்களால் மற்றவர்களை விட தங்கள் உழைப்பின் வீரியத்தை நிச்சயமாகப் புரிந்துகொள்ள இயலும்.  தங்களின் மூலிகைகள் குறித்த நூல்கள் மருத்துவத் துறைக்கு கிடைத்த பொக்கிஷங்களுள் ஒன்று.
தங்களின் இலட்சியப் பயணம் மேலும் வெற்றி நடை போடவும், தங்களின் அளப்பறிய அற்புதமான பணி சமுதாயத்திற்கு பயன்படவும், தங்களின் சிந்தனைகள் மேலும் மேலும் வளரவும், பட்டங்களும் பாராட்டுகளும், தகுதிகள் அனைத்துமுள்ள தங்களைத் தேடி வரவும் எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இறைவனின் பேரருளும், சித்தர் பெருமக்களின் ஆசீர்வாதங்களும், ஆஸ்ரம துறவிச் சகோதரிகளின் பிரார்த்தனையும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் என்றும் தங்கள் உடன் இருந்து தெய்வீகக் கவசமாக தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காத்து நிற்கும்!
தாங்களும், தங்கள் மனைவி திருமதி கஸ்தூரியும், தங்கள் மகன்கள் தேவகுமார், சுதாகர், மகள்கள் கோமதி, பிரியமாலினி அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ தெய்வத் திருமூவரின் திருவடிகளில் மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
மனம் நிறைந்த வாழ்த்துகளுடனும், நெகிழ்ந்த பிரார்த்தனைகளுடனும்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடித்தொண்டில்,
ராமகிருஷ்ண பிரியா அம்பா
(தலைமை மாதாஜி)
யதீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியா அம்பா

Saturday, 26 November 2016

உலகத் தமிழ் பல்கலைக்கழகம்(USA) டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பஞ்சவர்ணம் அவர்களின் பாராட்டு விழா

பஞ்சவர்ணம்
            பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவரும் சிறுதுளி இயக்குநருமான
ஆர். சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றுகிறார்TPTC நடராஜன் வாழ்த்துரை வழங்குகிறார்


கவிதை கணேசன் வாழ்த்து மடல் வாசிக்கிறார்


முகமது யுசுப் வாழ்த்திப் பேசுகிறார்


சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவரும், பேராசிரியருமான ஒப்பிலாமதிவாணனின் வாழ்த்துரை


சென்னைப் பல்கலைக்கழக பேரகரமுதலித் திருத்தத்திட்ட முதன்மை பதிப்பாசிரியர், பேராசிரியர்  V. ஜெயதேவன் வாழ்த்துரை


கி. தனவேல் IAS வாழ்த்துரை


திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் வாழ்த்துரை


திருச்சி சென்டான்ஸ் சகோதிரிகள் அளித்த வாழ்த்து மடல்மருதூர் அரங்கராசன்


 திருச்சி சென்டான்ஸ் சகோதிரிகள்